சுயமரியாதை இயக்கத்தின் 100 ஆண்டுகள், 100 புத்தகங்கள் நீதிக் கட்சித் தொடங்கி இந்த நாள் வரை, திராவிட இயகத்தின் முக்கிய காலப்பதிவுகளை ஆவணப்படுத்தும் 100 புத்தகங்கள் இவை. சர்வதேச அளவில் புகழ்பெற்ற பதிப்பகங்கள் பயன்படுத்தும் நடைமுறையைப் பின்பற்றி, Classics நூல்வரிசைகளின் மரபில், சீர்மையையும் தனித்துவத்தையும் ஒரு சேர வடிவமைத்து இந்தப புத்தகங்களை உருவாக்கியிருக்கிறோம். 1916 இல் வெளியிடப்பட்டு, நமது தமிழ்நாட்டின் திசைவழியையே மாற்றிய, பார்ப்பனரல்லாதோர் அறிக்கை (NON-BRAHMIN MANIFESTO) தொடங்கி, அண்மையில் மறைந்த கலைஞர், பேராசிரியர் ஆகியோரின் நூல்கள் உள்பட, திராவிட இயக்க ஆளுமைகளின் 100 நூல்கள் இந்த நூல்வரிசையை அழகு செய்கின்றன. அறிஞர் அண்ணாவின் தீ பரவட்டும், பணத்தோட்டம் உள்ளிட்ட சுமார் 40 நூல்கள். கலைஞரின் நெஞ்சுக்கு நீதி 6 தொகுதிகள், குறளோவியம், சங்கத் தமிழ். தொல்காப்பியப் பூங்கா, திருக்குறள் உரை, பராசக்தி கதை வசனம் ஆகியவை, பாவேந்தர் பாரதிதாசன், ஏ எஸ் வேணு. பேராசிரியர் க.அன்பழகன், நாவலர் நெடுஞ்செழியன், ஏ வி பி ஆசைத்தம்பி, சி பி சிற்றரசு, புலவர் கோவிந்தன். மூவலூர் ராமாமிருதம் அம்மையார். கவிஞர் முடியரசன். மா இளஞ்செழியன், சாமி சிதம்பரனார், புலவர் குழந்தை உள்ளிட்ட பலரின் முக்கியப் படைப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன.
ஹார்லெம் மறுமலர்ச்சி சிறுகதைகள் அமெரிக்காவின் 250ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் தொகுப்பு இது. இனத்தின் காரணமாகவும், நிறத்தின் காரணமாகவும் அமெரிக்காவில் ஒடுக்கப்பட்ட மக்களில் முதன்மையானவர்கள், அங்கே அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டு, மனிதர்களாக வாழமுடியாமல் போன கறுப்பினத்தவர்கள். அவர்களும் தங்களது நிலையைக் குறித்த அரசியல், இலக்கிய விழிப்புணர்வை இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெற்றார்கள். ‘ஹார்லெம் மறுமலர்ச்சி’ என்று அழைக்கப்படும் இந்தக் காலகட்டத்தில் கறுப்பினத்தவர்கள் கலை, இலக்கியம், இசை என அனைத்து துறைகளிலும் புதுரத்தத்தை பாய்ச்சினார்கள். இந்த காலகட்டத்தில் அவர்களால் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பே இந்த நூல்.
ஹார்லெம் மறுமலர்ச்சி கட்டுரைகள் அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளிவரும் கட்டுரை தொகுப்பு இது. அமெரிக்காவின் வரலாற்றில் ஒடுக்கப்பட்ட கறுப்பினத்தவர்கள் அரசியல் எழுச்சி கண்ட காலமான ‘ஹார்லெம் மறுமலர்ச்சி’ காலத்தைச் சேர்ந்த சிறந்த கட்டுரைகளின் தொகுப்பு. ‘ஹார்லெம் மறுமலர்ச்சி’ கறுப்பினத்தவரின் அரசியல் விழிப்பை மட்டுமல்ல, அவர்கள் கலை, இலக்கியம், இசை, திரைப்படம் எனப் பல்வேறு துறைகளில் புதிதாக ஒரு புயலாய் நுழைந்த காலம். அதுவரை அவர்களைப் பற்றியிருந்த முன்முடிவுகளை எல்லாம் திருத்தி எழுதிய காலம். எல்லாவற்றிலும் முக்கியமாக அடுத்ததாக நடக்கப்போகும் பொது உரிமைகளுக்கான போராட்டத்தின் அடித்தளம் வலுவாக இடப்பட்ட காலம். 1910-1930 வரையிலான ‘ஹார்லெம் மறுமலர்ச்சி’ காலகட்டத்தின் முக்கியமான சிந்தனைகளை இத்தொகுப்பு வழங்குகிறது. அமெரிக்க வரலாற்றின் ஒரு முக்கியக் காலகட்டத்தின் ஆவணமாக இது, தமிழில் வெளிவருவது ஒரு வரலாற்று நிகழ்வு என்றே சொல்ல வேண்டும்.
செயற்கை நுண்ணறிவும், புத்தகப் பதிப்புத் துறையும் உலகம் இன்று செயற்கை நுண்ணறிவின் கண்ணசைப்பில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது செயற்கை நுண்ணறிவு தொடாதத் துறை ஒன்றில்லை; அது தொடாமல் இனி ஒரு துறையும் இருக்கப்போவதுமில்லை. செயற்கை நுண்ணறிவின் நம்பமுடியாத வளர்ச்சி அச்சத்தை உருவாக்கியிருப்பது உண்மைதான்; பதிப்புத் துறையும் அதற்கு விதிவிலக்கு அல்ல. இந்தப் பின்னணியில்தான் நதீம் சாதிக் எழுதியிருக்கும் நூல், Shimmer, don't Shake : How Publishing Can Embrace Al, மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அதன் தமிழாக்கமே ‘அச்சம் தவிர்'. ‘அச்சம் தவிர்' பதிப்பித்தலின் பரிணாம வளர்ச்சியையும் செயற்கை நுண்ணறிவின் எழுச்சியையும் ஆராய்கிறது. பதிப்பாளர்கள், நூலாசிரியர்கள், வாசகர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினருக்கும் ஏஐ-யால் ஏற்படப்போகும் மாறுதல்களை விரிவாக ஆய்கிறது இந்த நூல். செயற்கை நுண்ணறிவு பதிப்பித்தலில் ஒரு நேர்மறையான சக்தியாக எவ்வாறு இருக்க முடியும் என்பதை ஆராய்ந்து வழிகாட்டுகிறது
ஹெமிங்வேயின் வாழ்வின் ஒவ்வொரு பகுதியும் பல சாகசங்களையும், அனுபவங்களையும் கொண்டது. ஹெமிங்வே தன்னுடைய வாழ்வின் பல பரிணாமங்களை, தன்னுடைய அனுபவங்களை, தான் சந்தித்த மனிதர்களைப் பதிவுசெய்து கொண்டே இருந்தார். அவரது எழுத்துகளில் எது அவரது அனுபவம், எது கற்பனை என்று பிரித்துப் பார்ப்பது மிகவும் கடினம். அவரது விருப்பங்கள் அனைத்தையும் நாம் அவரது கதைகளில் தொடர்ச்சியாகப் பார்க்கிறோம். ‘சிறுகதை என்னும் கலை’ என்ற கட்டுரையில் ஹெமிங்வே இப்படிச் சொல்கிறார்: “நான் எப்போதும் பனிப்பாறை சித்தாந்தத்தின் படியே எழுத விழைகிறேன். வெளியில் தெரியும் ஒவ்வொரு பகுதிக்கும், நீருக்கு கீழே எட்டில் ஏழு பங்கு பனிப்பாறை மூழ்கி இருக்கிறது. எவையெல்லாம் தேவையில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அவற்றை எழுதாமல் இருப்பது உங்களது பனிப்பாறையைச் செம்மைப்படுத்துகிறது.” 1920களில் ஹெமிங்வே பாரிஸில் வாழ்ந்த நாட்களில் எழுதிய சிறுகதைகள் சிலவற்றின் மொழிபெயர்ப்பான இத்தொகுப்பில் அதை நீங்கள் காணலாம்.
சமீபத்தில் வெளியான புத்தகங்கள்
₹20,165.00 Original price was: ₹20,165.00.₹15,000.00Current price is: ₹15,000.00.
நீதிக் கட்சித் தொடங்கி இந்த நாள் வரை, திராவிட இயகத்தின் முக்கிய காலப்பதிவுகளை ஆவணப்படுத்தும் 100 புத்தகங்கள் இவை.
₹20,165.00 Original price was: ₹20,165.00.₹15,000.00Current price is: ₹15,000.00.
செவ்வியல் காலத்திலிருந்து அண்மைக் காலம் வரை தமிழில் வெளிவந்திருக்கும் மிக முக்கியமான நூல்களின் வரிசை இது. காலத்தை வென்ற கிளாசிக்குகளை வாசகர்களிடம் எடுத்துச்செல்வதற்கான முயற்சி.
சென்னை பன்னாட்டு புத்தகக் கண்காட்சி
ஜனவரி 2023 இல் சென்னையில் நடந்த சென்னை பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியில் அனைவரையும் கவனத்தையும் ஈர்த்தது ஆழி பப்ளிஷர்ஸ் வெளியிட்ட குறள் 100 மொழி 100 புத்தகம்தான். தமிழ்நாடு முதல் அமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட தலைவர்களும் வெளிநாட்டுப் பார்வையாளர்களும் இதை ஆச்சரியத்தோடு பார்த்தனர். மேலும் விவரங்களுக்கு >>
இன்றும் என்றும் ஆழியின் நூல்களில் சிறந்த விற்பனையில் இருக்கும் நூல்கள். அச்சு நூலாகவோ மின்னூலாகவோ வாங்கலாம்.
₹20,165.00 Original price was: ₹20,165.00.₹15,000.00Current price is: ₹15,000.00.
நீங்கள் வளர்ந்துவரும் படைப்பாளியா? – உங்கள் புதியப் புத்தகங்களை ஆழி பதிப்பகம் மூலமாக வெளியிடுங்கள். அச்சு, மின் மற்றும் ஒலி வடிவில் உலகெங்கும் உங்கள் வாசகர்களைச் சென்றடையுங்கள்.
ஆழி பதிப்பகத்தின் அதிகாரபூர்வ யூ ட்யூப் சானல். நிகழ்வுகள், வெளியிடப்படும் நூல்கள் தொடர்பான உரைகள், நேர்காணல்கள் ஆகியவற்றைக் காணுங்கள்.