Description
‘உலகைத் தமிழுக்குக் கொண்டுவருதல்; தமிழை உலகுக்குக் கொண்டுசெல்லல்!’ என்கிற நோக்குடன் இயங்கிவரும் சென்னை பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சியின் 3ஆம் பதிப்பை முன்னிட்டு தற்கால உலகச் சிறுகதைகளின் இந்த மொழிபெயர்ப்புத் தொகுப்பைக் கொண்டுவருவதில் ஆழி பதிப்பகம் மகிழ்கிறது. உலகம் முழுக்க இருக்கும் உலகம் முழுக்க இருக்கும் கலாச்சாரத்தையும் அன்றாட வாழ்வின் குரல்களையும் தொகுத்துக் கொண்டுவருவது எங்கள் நோக்கமாக இருந்தது. தமிழ் வாசகர்கள், குறிப்பாக இளம் வாசகர்களிடம் இந்தத் தொகுப்பு புத்தொளியூட்டும் அனுபவமாக இருக்கும்; அதன்வழியே இந்த உலகை அவர்கள் காணும் விதம் விரிவடையும். உலகைக் குறித்த பல்வேறு கோணங்களை, பார்வைகளை அவர்கள் ஏற்றுத் தழுவ இத்தொகுப்பு உதவும் என நம்புகிறோம்.