Description
நான் ‘ஆரியம்’, ‘திராவிடம்’ என்ற சொற்களை எந்த ஒரு மரபையோ இனத்தையோ குறிக்கும் நோக்கமின்றி, முற்றிலும் மொழியியல் நோக்கில் பயன்படுத்துகிறேன். மக்கள் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மாறுவது அடிக்கடி நிகழக்கூடும் என்பதாலும், இம்மாற்றம் அடிக்கடி நிகழ்ந்திருக்கிறது என்பதாலும், இவ்வாறல்லாது வேறுவகையில் இச்சொற்களைப் பயன்படுத்த இயலாது. ஆரிய மொழிகளைப் பேசுவோர் திராவிட, முண்டா மொழிகளைப் பேசுவோருடன் பிரித்தறிய முடியாத வகையில் ஒன்றிணைந்த இந்தியச் சமூகம், இந்த இரண்டு மூலங்களிலிருந்தும் பெற்ற பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டு உருவான ஒன்றாகும்.
– ஐராவதம் மகாதேவன்