Description
“புலிகள், திராவிட இயக்கம், இந்துத்வா எனப் பல்வேறு அமைப்புகளை ஆய்வுக்குட்படுத்தி நாம் என்ன பாடங்களைக் கற்க முடியம் எனச் சிந்திக்கவைக்கிறது இந்த நூல். சன் சூவின் போரியல் உத்திகள், அமெரிக்க – அல்கொய்தாப் போர், திரபால்கர் போர், புலிகளின் கொரில்லாப் போர் எனப் பெரிய வலம் வருகிறது. போரிலிருந்து பொருளாதாரம் வரை, சதுரங்க ஆட்டத்திலிருந்து அரசியல் ஆட்டம்வரை உத்திகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்று உதாரணங்களுடன் விளக்குகிறது. தமிழர்களின் எதிர்காலத்துக்காக போராடும் ஒவ்வொருவரும் படித்து விவாதிக்க வேண்டிய நூல்.
இன்று தமிழுலகில் உத்திகளைப் பற்றி தெளிவில்லாமல் ஒரு குழப்ப சூழ்நிலை நிலவுகிறது. அதனால் அண்மைக்கால புதிய தத்துவங்களைக் கொண்டு உத்திகளைப் பற்றி ஆசிரியர் இந்நூலை எழுதியிருக்கிறார். கடந்த சில பத்தாண்டுகளில் உத்திகளைப் பற்றிய பார்வை போரிலிருந்து பொருளாதாரம் வரை சமூகத்தில் உள்ள அனைத்து சிக்கலான அமைப்புகளும் வெகுவாக மாறிவிட்டது. இது பழைய உத்திகளை முழுதுமாகப் புரட்டிப்போட்டு ஒரு புதிய சட்டகத்தை உருவாக்கியுள்ளது. இக்கருத்துகளை விளக்கி அதன் அடிப்படையில் தமிழ்த்தேசியத்திற்கான ஒரு பெருந்திட்டத்தை உருவாக்குவதுதான் இந்நூலின் குறிக்கோள்.
தமிழ்த்தேசிய இயக்கம் அல்லது தமிழ்நாட்டின் உரிமைகளுக்கான அனைத்து இயக்கங்களும் எந்த திசையில் செல்லவேண்டும் என்பதில் நமக்கு மிகப்பெரிய குழப்பங்கள் இருக்கின்றன. அதைத் தெளியவைப்பதற்கான முயற்சியாக இந்நூல் ஆசிரியர் சேதுராமலிங்கம் முயற்சியில் அறிவாயம் என்கிற சிந்தனை மையம் ஒன்று மெய்நிகர் உலகில் உருவாகியுள்ளது. அதன் முதல் வெளியீடு இது.”