Description
‘தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ எனத் தொடங்கிய ஒரு பயணம் அனைத்து மொழிகளுக்குமான உரிமைப் பயணமாக மாறியது. இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்ட அரசியல் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் பரவலாக இருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்த அந்தப் பயணத்தின் பதிவே இந்த நூல். இது இந்தி வெறியர்களின் ஏகாதிபத்திய ஒருமைப்பாட்டைவிட தேசிய இனங்களின் உரிமைசார்ந்த ஒற்றுமைப்பாடே சாத்தியம் என்பதை வெளிப்படுத்திய ஓர் இயக்கத்தின் வரலாற்றுச் சுவடும்கூட.
இந்தியாவின் மொழி அரசியலின் கதையாடலையும் போக்கையும் மாற்றிய ஒரு சிலரில் முக்கியமானவர் ஆழி செந்தில்நாதன். 2013 முதல் மொழி நிகர்மை உரிமைப் பரப்பியக்கம் (CLEAR) என்ற கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்று, தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் தொடர்ந்து இயங்கிவருகிறார். பரப்புரையின் ஒரு பகுதியாக அவர் பேசிய பேச்சுகள், எழுதிய கட்டுரைகள், அளித்த நேர்காணல்கள், முன்வைத்த ஆய்வுரைகள் பல. அவற்றில் ஒரு சில இந்தப் புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. போராட்டப் பயணங்களின்போது அவர் முகநூலில் பதிவுசெய்துவந்தக் குறிப்புகளும் மிக முக்கியமானவை. அவற்றோடு நூற்றுக்கும் மேற்பட்ட புகைப்படங்களும் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த நூல் வழியாக ஆழி செந்தில்நாதனின் அந்தப் பயணத்தில் நீங்களும் கலந்துகொள்ளலாம்.
இந்தி பேசாத மக்கள் அனைவருக்குமான சுதந்திரத்தை வென்றெடுக்க உதவும் அறிவை செந்தில் நமக்குத் தருகிறார். அதனால் அவர் என்ன சொல்லவருகிறார் என்பதை நாம் காதுகொடுத்துக்கேட்டுத்தான் ஆகவேண்டும்.
கோர்கோ சாட்டர்ஜி, அணிந்துரையில்
I met Mr. Senthil this year on the International Mother Language Day at Press Club in a CLEAR press conference. He is a man with great charisma and dedication. The Hindi empire better watch out. The Senthil Nathans of the world aren’t silent.
திப்யாமன் சக்ரவர்த்தி, முகநூலில்