Description
சீனா – இன்று உலகின் மிகப்பெரிய வல்லரசுகளில் ஒன்று. நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியாவைப் போல ஏழைத் தேசமாகவே இருந்த சீனா, இன்று உலக அரங்கில் உச்சத்துக்குச் சென்றிருக்கிறது. அதன் அரசியல், பொருளாதார வெற்றிகள் மேற்குலகைக் கலக்கமுறச் செய்துள்ளன. சீன நூற்றாண்டு தொடங்கியிருப்பதாக உலகம் கருதுகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகாலமாக தமிழகத்தோடு உறவில் இருந்த ஒரு நாடுதான் சீனா. இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவும் தமிழகமும் கிழக்குலகுக்கும் மேற்குலகுக்கும் இடையிலான கடல்வழி வணிகத்தினூடாக பின்னிப் பிணைந்திருந்த காலம் ஒன்றுண்டு. ஆனாலும் சீனாவைப் பற்றி நமக்கு தெரிந்தவை மிகவும் குறைவே. அந்தக் குறையைப் போக்குவதற்கான முயற்சிதான் இது.
இந்த நூல் பண்டைய சீனாவின் கதைகளில் தொடங்கி அது பொருளாதார வல்லரசாக உயர்ந்த இன்றைய காலம் வரையிலான வரலாற்றை ஆதாரபூர்வமாக சுவையானதொரு மொழியில் சொல்கிறது. காலனிய சீனாவின் அவமானக் கதையையும் செஞ்சீனாவின் சிவப்புச் சரித்திரத்தையும் வரைந்துகாட்டுகிறது. அதைவிட முக்கியமாக, கடந்த முப்பதாண்டுகளில் அது எவ்வாறு ஒரு பெரிய பொருளாதார வல்லரசாக உருவானது என்பதை புள்ளிவிவரங்களுடன் வியப்புடனும் விமர்சனத்துடன் பதிவுசெய்கிறது. தமிழக-சீன, இந்திய-சீன உறவுகளையும் அலசுகிறது.
இது சீனாவைப் பற்றிய தகவல் களஞ்சியம் மட்டுமல்ல. அதன் மீதான அரசியல், பொருளாதார, சமூக, ராஜதந்திர ஆய்வும்கூட.