Description
சமகால அரசியல் நிகழ்வுகள் பற்றித் தொடர்ந்து எழுதிவரும் ஆழி செந்தில்நாதனின் கட்டுரைகள், நேர்காணல்களின் தொகுப்பு இது. 2013 மாணவர் போராட்டம் தொடர்பாக எழுதப்பட்ட, பின் – திராவிடத் தமிழகத்தின் எழுச்சி என்ற கட்டுரை. ஈழ ஆதரவு தொடர்பான டிரவர் கிரான்ட், கேலம் மேக்ரே நேர்காணல்கள், கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் மற்றும் சவுதியில் ரிஸானா நஃபீக் என்கிற தமிழ் முஸ்லிம் பெண் வெட்டிக்கொல்லப்பட்டது தொடர்பான விரிவான அலசல்கள், ரோஹிங்கியா முஸ்லீம்கள் தொடர்பான மாங் ஃஸார்னியுடனான நேர்காணல், கலைஞர் கருணாநிதி மீதான திருக்குறள் வழி மதிப்பீடு என அவர் இதழியலின் வரம்புகளை விரிவாக்கி எழுதியிருக்கிறார். அவர் ஆசிரியராகவும் பதிப்பாளராகவும் இருந்த ‘தமிழ் ஆழி’ இதழில் இவை வெளிவந்தன.
அரசியல் செயல்பாட்டாளரும் எழுத்தாளருமான இந்நூலாசிரியர் ஆழி செந்தில்நாதன் தமிழகத்தின் உரிமைகள், மொழியுரிமை, சமூக நீதி, மக்கள் பொருளாதாரம், கணினித்தமிழ், மொழிபெயர்ப்பு, இதழியல் எனப் பல துறைகளில் களம்கண்டு வருகிறார். தொலைக்காட்சி விவாதங்கள் மூலமாகவும் சமூக ஊடகங்களின் மூலமாகவும் கருத்துப்பரப்பல் செய்துவரும் ஆழி செந்தில் நாதனின் பிற நூல்கள்: டிராகன், மொழி எங்கள் உயிருக்கு நேர், எங்கே அந்தப் பத்துத் தலை இராவணன்?
தற்போது தன்னாட்சித் தமிழகம், மொழி நிகர்மைக்கும் உரிமைக்குமான பரப்பியக்கம் (CLEAR) ஆகிய அமைப்புகளில் முக்கியப் பொறுப்புகளில் உள்ளார்.