Description
இந்த நூலில் இடம்பெற்றுள்ள வியத்தகு அருங்காட்சியகங்களில் சில: லியனார்டோ மற்றும் மார்க்கோபோலோ அருங்காட்சியகங்கள் (இத்தாலி), ஸ்மித்சோனியன் அருங்காட்சியகம் (அமெரிக்கா), அங்கோர் அருங்காட்சியகம் (கம்போடியா), பிரித்தானிய அருங்காட்சியகம் (இங்கிலாந்து), சயாம் மரணப்பாதை அருங்காட்சியகம் (தாய்லாந்து), ஏதன்ஸ் அகாதெமி (கிரீஸ்). மேலும் இலங்கை, நோர்வே, சுவீடன், போலந்து, குரோய்ஷியா, ஹங்கேரி, அயர்லாந்து, நெதர்லாந்து, பிரான்சு, மோனோக்கோ, தென் ஆப்பிரிக்கா, டென்மார்க், ஸ்பெயின், தென் கொரியா, எகிப்து, ஆஸ்திரியா, செக் குடியரசு, சுவிட்சர்லாந்து, மலேசியா போன்ற நாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களைப் பற்றியும் இதில் எழுதியுள்ளார்.
பல வெளிநாட்டு அருங்காட்சியகங்களில் எவ்வாறு அரும்பொருட்கள் மிக நேர்த்தியான முறையில் பாதுகாக்கப்படுகின்றன என்பதனை மிகத் தெளிவாக இந்த நூலில் இடம்பெறுகின்ற கட்டுரைகளின் வழி விளக்கியுள்ளார்.
மனித குலம் பலவேறு முயற்சிகளின் வழியாக தன் வாழ்க்கை முறையை மேம்படுத்திக் கொண்டு அறிவியல் தேடலின் வழி இவ்வுலகில் மட்டுமின்றி ஏனைய கோள்களையும் அறிய மேற்கொள்ளும் முயற்சிகளையும் ஆவணப்படுத்துகின்றன அருங்காட்சியகங்கள்.
நீங்களும் உலக அருங்காட்சியகங்ளினூடாக ஓர் உலக வரலாற்றுப் பயணத்தைத் இந்தப் புத்தகத்திலிருந்து தொடங்குங்கள். இதனை வாசிப்போருக்கு அருங்காட்சியகங்களின்பால் ஆர்வத்தை இந்த நூல் வழங்கும் என்று நம்புகிறேன்.