பாதை மாறாப் பயணம் (இரண்டு பாகங்களுடன்)

1,900.00

கால வரிசைப்படி அடுக்கி எழுதப்பட்ட சுயசரிதையாக இல்லாமல் முக்கியமான நிகழ்வுகளையும் சுவாரசியமான சம்பவங்களையும் கொண்டு தொடுக்கப்பட்ட நினைவுச் சரம். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் அருஞ்சாதனைகளும், இன்றைய முதல்வர் மு. க. ஸ்டாலினின் வெற்றிச் சரித்திரமும் இந்த சுயசரிதையினூடே பின்னிப் பிணைந்து வருகிறது. சுமார் 1500 பக்கங்களில் 2 பாகங்களாக பல அரிய புகைப்படங்களுடனும், குறிப்புகளுடனும் எளிய நடையில் தொகுக்கப்பட்டுள்ள நூல். கட்சி உறுப்பினர்களையும் தாண்டி சாமானிய மக்களும் வாசித்துப் பயன்பெறும் அனுபவங்களின் தொகுப்பாகும்.

Add to Wishlist
Add to Wishlist

Description

தளிக்கோட்டை முதல் டெல்லி வரையிலான நெடும் பயணத்திலும், அரசு பணியாளர் தொழில் முனைவோரான பரிணாம வளர்ச்சியிலும், கழகப் பணியில் கிளைக் கழகச் செயலளார் என்ற நிலையிலிருந்து கழகத்தின் பொருளாளர் என்று ஏற்றம் பெற்றதிலும் கடந்து வந்த சோதனைகள் பல, மிசா சிறைவாசம் போன்ற இடர்கள் பல. இருந்தும் கழகத்தின் கொள்கை கோட்பாடுகளுக்கு இணங்க தமிழக மக்களின் நலன்காக்கவும், இன்னல்கள் களையவும் கிடைத்த நல்வாய்ப்புகள் பல. 191 நாடுகள் கலந்துகொண்டு டெல்லியில் 10 நாட்கள் நடைபெற்ற காலநிலை மாற்றம் தொடர்பான பன்னாட்டு மாநாட்டிற்கு பொறுப்பேற்று, மாநாட்டி இறுதியாக “நிலைநீடித்த வளர்ச்சிக்கான டெல்லி பிரகடனத்தை” அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகள் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டதற்கு மேற்கொண்ட முயற்சிகள் பெரும் சாதனைகளுள் ஒன்று. மாநாட்டினைத் தொடர்ந்து பன்னாட்டு சுற்றுச் சூழல் அமைப்பின் தலைவராக ஓராண்டு செயல்பத்தது என இவ்விரண்டு அனுபவமுமே இந்த சுயசரிதை உருவான தூண்டுகோலாகும். தேர்தல் களங்களும், களப்பணியாற்றிய சக கழக உடன்பிறப்புகளும், அமைச்சராக செயல்பட்ட நாட்களும், இன்றைய முதல்வர் மு. க. ஸ்டாலினும், டி.ஆர். பாலுவும் சென்னை மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களாக ஒரே ஆண்டில் பொறுப்பேற்று இன்று மு. க. ஸ்டாலின் கழகத் தலைவராகவும், டி.ஆர்.பி. கழக பொருளாளராக பொறுப்பிலிருப்பது என பல அனுபவங்களைத் திரட்டி உருவான ஒரு எளிய சுயசரிதை.

Additional information

Author

You were not leaving your cart just like that, right?

Enter your details below to save your shopping cart for later. And, who knows, maybe we will even send you a sweet discount code :)