Description
தமிழருடைய மருத்துவம் பற்றிய ஆய்வு பிற்காலத்திலேதான் தோன்றியது. பலகாலமாக இந்தியவியல் என்ற பொதுக் கருப்பொருள் அடிப்படையிலேயே ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டன. இதிலே மிகப் பெரிய பகுதியினை சமஸ்கிருத மொழி சார்ந்த வடநாட்டுப் பொருள்களே ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. தமிழ்மொழி சார்ந்த ஆய்வுகளை முன்னெடுப்பதற்காக அமைக்கப்பட்டதே உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். இந்நிறுவனம் தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் மட்டுமல்லாமல் தமிழர் வரலாறு, பண்பாடு, கலை, இசை, மருத்துவம், வானசாத்திரம், வணிகம், சமூகவியல், நாட்டாரியல், தொல்லியல், மெய்யியல் என்னும் துறைகளிலே ஆய்வுகள் மேற்கொள்ளவேண்டுமென அறிஞர்களுக்கு ஊக்கம் அளித்தது. எனவே தமிழ் ஆய்வு ‘தமிழியல் ஆய்வு’ எனப் புதிய பெயரையும் களஅளவினையும் பெற்றது. தமிழியல் ஆய்வின் வளர்ச்சி தமிழ் மருத்துவம் பற்றியும் விரிவாக அறியும் வாய்ப்பினை நமக்குத் தந்துள்ளது. கலாநிதி பால. சிவகடாட்சத்தின் இந்நூல் நம்முடைய மருத்துவம் பற்றி மிக விரிவாகக் கூறுகிறது.