Description
“டாம் மாமாவின் வீடு” என்ற புத்தகம் பற்றி எடுத்துரைக்கிறார். அமெரிக்காவில் வாழும் கறுப்பின மக்கள் தங்களுக்கு சமூகத்தில் சம உரிமை வேண்டி போராடும் நிலை. அவர்களில் சிலர் மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், வணிகர்களாகவும், அரசு அதிகாரிகளாகவும், அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள். இருந்தபோதும், அம்மக்களின் சமூக வாழ்வில் அனுபவிக்கும் இழிவுகள், சிறுமைகள், கொடுமைகள், இன்னல்கள் ஏராளம்.
சட்டம் சம உரிமை வழங்கி இருந்தாலும், கல்விக் கூடங்களிலும், உணவகம், திரையரங்கம் போன்ற போது இடங்களிலும் நிறவெறி தலைவிர்த்தாடும் அவல நிலை. கருப்பர்கள் வெறும் உடைமைகள் என்று கர்த்தர் கூறுவதாக உபதேசிப்பவர்களும் உண்டு என்றுரைக்கிறார்.
ஆப்பிரிக்காவில் அரசாலும் உரிமைபெற்ற கறுப்பினத்தவரை, எப்படி ஆடு மாடுகள் விற்பது போல வியாபாரிகள் அடிமைச் சந்தையில் விற்றார்கள் என்று விளக்குகிறார். “நீக்ரோ உற்பத்தி பண்ணைகள்” செயல்பட்டு வந்த விதங்களையும் காட்சிப்படுத்துகிறார்.
டக்ளஸ் டில்மன் அதிபரான கதையையும், அதன் பின்னர் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளையும் விவரிக்கிறார். ஆதிக்கம் செலுத்தும் போக்கு ஒவ்வோர் நாட்டிலும் ஒவ்வோர் விதமான வடிவம் கொள்கிறது; கருவிகளைத் தேடிப் பெற்றுக்கொள்கிறது. எளியோர் தமை வலியோர் சிலர் வதைப்பது தான் நோக்கம் என்கிறார்.
உலகின் பல நாடுகளிலும் நடப்பதையும் இங்கே தன் தம்பிகள் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம் என்றும், தானறிந்தவற்றை அவர்களுடன் பகிர்ந்துகொள்வது தன் கடமையென்றும் உணர்ந்த அண்ணாவின் படைப்பு இது.