செவ்வியல் காலத்திலிருந்து அண்மைக் காலம் வரை தமிழில் வெளிவந்திருக்கும் மிக முக்கியமான நூல்களின் வரிசை இது. காலத்தை வென்ற கிளாசிக்குகளை வாசகர்களிடம் எடுத்துச்செல்வதற்கான முயற்சி. இந்த நூல்வரிசையில் இப்போது திராவிட இயக்கம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் முற்போக்கான இயக்கங்களின் தலைவர்களும் அறிஞர்களும் எழுதிய நூல்கள் முதலில் இடம்பெறுகின்றன. தொடக்கத்தில் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்களிலிருந்து அதிகம் இடம்பெற்றாலும் விரைவில் மற்ற நூல்களும் இடம்பெறும்.