தமிழ்க்கொடி என்ற தலைப்பிலான ஒரு நூல்தொகுப்போடு 2007 இல் தொடங்கியது ஆழியின் பயணம். இன்று தமிழின் மிக முக்கியப் பதிப்பகங்களில் ஒன்றாக உயர்ந்திருக்கிறது.

தமிழ் உலகத்தின் மிகச்சிறந்த எழுத்தாளர்களுடனும் சிந்தனையாளர்களுடனும் ஆழி பயணிக்கிறது. எமது சிறந்த நூலாசிரியர்களில் சிலர்: இரா. செழியன், கவிஞர் ஞானக்கூத்தன், கோணங்கி, ரவிக்குமார், அழகிய பெரியவன், பா. வெங்கடேசன், அய்யப்ப மாதவன், பாமா, பா. செயப்பிரகாசம், சா. தேவதாஸ், குட்டி ரேவதி, ஸ்ரீநேசன், கல்யாண்ஜி, சமயவேல், ஹெச். ஜி. ரசூல், ஸ்டாலின் ராஜாங்கம், சந்திரன்,  யோ. திருவள்ளுவர், ஆழி செந்தில்நாதன், பேயோன், தமிழ் நதி, கெளதம சன்னா, டாக்டர் அ. ராமசாமி, க சுபாஷிணி..

ஆழியின் நூல்கள் பெரும்பாலும் அரசியல், வரலாறு, வாழ்க்கை வரலாறு, பொருளாதாரம், சுற்றுச்சூழல், அறிவியல், உலக விவகாரங்கள், இலக்கியம், இலக்கிய விமர்சனம், பண்பாட்டு ஆய்வுகள், சமூக ஆய்வுகள், ஊடகவியல் ஆய்வுகள், சினிமா விமர்சனம் உள்ளிட்ட களங்களில் விரிகிறது. அண்மையில் மின்னூல்கள், இணைய வழி விநியோகம் ஆகிய களங்களினூடாக ஆழி தன் பரப்பை விரிவுசெய்கிறது.

அண்மைக்காலமாக, உலகளாவிய புத்தக நிறுவனங்களோடு இணைந்து ஆழி புதிய மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடுகிறது.

Mini Cart 0

Your cart is empty.