டிராகன்: புதிய வல்லரசு சீனா

500.00

பிரமிக்க வைக்கும் சீனாவின் வளர்ச்சி எவ்வாறு சாத்தியமாயிற்று என்பதனை ஆய்ந்து அறியும் ஒரு முயற்சியே இந்நூல். அனால் அதேவேளையில் பொருளாதார அரசியல் ரீதியாக அதன் வளர்ச்சி ஏற்படுத்தும் பங்கத்தையும் அறிந்துகொள்வது அவசியமாகிறது. குணம் நாடி குற்றம் நாடி, காய்த்தல் உவத்தலின்றி பல்வேறு கருத்துகளை ஈர்ப்புள்ள விதமாக இந்நூலில் ஆசிரியர் ஆழி செந்தில்நாதன் எழுதியுள்ளார். குறிப்பாக, பேரரசின் சீன காலத்தின் வாழ்வியல், அரசியல், சமூக அம்சங்கள் குறித்த விவரங்கள் இந்த நூலின் முக்கியமான அம்சம்.

Add to Wishlist
Add to Wishlist
SKU: DPVC Categories: ,

Description

சீனா – இன்று உலகின் மிகப்பெரிய வல்லரசுகளில் ஒன்று. நாற்பது ஆண்டுகளுக்கு முன்புவரை இந்தியாவைப் போல ஏழைத் தேசமாகவே இருந்த சீனா, இன்று உலக அரங்கில் உச்சத்துக்குச் சென்றிருக்கிறது. அதன் அரசியல், பொருளாதார வெற்றிகள் மேற்குலகைக் கலக்கமுறச் செய்துள்ளன. சீன நூற்றாண்டு தொடங்கியிருப்பதாக உலகம் கருதுகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகாலமாக தமிழகத்தோடு உறவில் இருந்த ஒரு நாடுதான் சீனா. இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவும் தமிழகமும் கிழக்குலகுக்கும் மேற்குலகுக்கும் இடையிலான கடல்வழி வணிகத்தினூடாக பின்னிப் பிணைந்திருந்த காலம் ஒன்றுண்டு. ஆனாலும் சீனாவைப் பற்றி நமக்கு தெரிந்தவை மிகவும் குறைவே. அந்தக் குறையைப் போக்குவதற்கான முயற்சிதான் இது.
இந்த நூல் பண்டைய சீனாவின் கதைகளில் தொடங்கி அது பொருளாதார வல்லரசாக உயர்ந்த இன்றைய காலம் வரையிலான வரலாற்றை ஆதாரபூர்வமாக சுவையானதொரு மொழியில் சொல்கிறது. காலனிய சீனாவின் அவமானக் கதையையும் செஞ்சீனாவின் சிவப்புச் சரித்திரத்தையும் வரைந்துகாட்டுகிறது. அதைவிட முக்கியமாக, கடந்த முப்பதாண்டுகளில் அது எவ்வாறு ஒரு பெரிய பொருளாதார வல்லரசாக உருவானது என்பதை புள்ளிவிவரங்களுடன் வியப்புடனும் விமர்சனத்துடன் பதிவுசெய்கிறது. தமிழக-சீன, இந்திய-சீன உறவுகளையும் அலசுகிறது.
இது சீனாவைப் பற்றிய தகவல் களஞ்சியம் மட்டுமல்ல. அதன் மீதான அரசியல், பொருளாதார, சமூக, ராஜதந்திர ஆய்வும்கூட.

Additional information

Author

Publishers

ISBN Number

Published In

Cover

Perfect Binding

Pages

512

Size

டெம்மி

You were not leaving your cart just like that, right?

Enter your details below to save your shopping cart for later. And, who knows, maybe we will even send you a sweet discount code :)