லண்டன், போலோஞ்ஞா புத்தகக் கண்காட்சிகளுக்கும் செல்கிறார் ஆழி செந்தில்நாதன்.

மார்ச் 20 முதல் 23 வரை பாரீஸ் நகரத்தில் நடைபெறவுள்ள பாரீஸ் புத்தகக் கண்காட்சியில் இந்த ஆண்டு இந்தியா கெளரவ விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்தியன் பெவிலியனில் இந்தியாவிலிருந்து 20 பதிப்பகங்கள் பங்கேற்கின்றன. ஆழி பதிப்பகம் அதில் பங்கேற்கிறது.

உலகத்தை தமிழுக்கும் தமிழை உலகத்துக்கும் நூல்களின் வழியாக எடுத்துச்செல்வதை முதன்மையான நோக்கமாகக் கொண்டுள்ள ஆழி பதிப்பகம் இந்தக் கண்காட்சியில் கலந்துகொள்வதை பெருமிதமாக உணர்கிறது. ஐரோப்பாவிலிருந்து சிறந்த நூல்களை தமிழில் கொண்டுவருவதற்கு இந்தக் கண்காட்சியில் வாய்ப்புகள் கிடைக்கும் என அது எதிர்ப்பார்க்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக ஆழி பதிப்பகத்தின் பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் கலந்துகொள்கிறார்.

இந்தக் கண்காட்சிக்கு முன்பு மார்ச் 10 முதல் லண்டனில் நடைபெறவுள்ள லண்டன் புத்தகக் கண்காட்சிக்கும் பாரீஸ் கண்காட்சிக்குப் பிறகு மார்ச் 30 இலிருந்து இத்தாலியில் போலோஞ்ஞா நகரத்தில் நடைபெறவுள்ள பன்னாட்டுச் சிறார் புத்தகக் கண்காட்சிக்கும் அவர் செல்லவிருக்கிறார். 

ஏற்கனவே பிராங்க்பர்ட், புது தில்லி, பெய்ஜிங் போன்ற நகரங்களில் தொடர்ச்சியாக நடைபெறும் புத்தகக் கண்காட்சிகளில் இவர் தொடர்ந்து பங்கேற்று ஆழி பதிப்பகத்துக்கு சர்வதேச அடையாளத்தை அளித்துவருகிறார்.

“ஐரோப்பாவின் நவீன படைப்பாளர்களை கண்டறிந்து அவர்களது நூல்களை தமிழுக்குக் கொண்டுவருவதே இந்தப் பயணத்தின் நோக்கம்” என்று ஆழி செந்தில்நாதன் கூறுகிறார்.

இவரது பயணத்தின்போது அவரை ஐரோப்பாவில் சந்திக்க உள்ளவர்கள் அவரை senthil.nathan@aazhibooks.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொண்டு உரையாடலாம்.

Mini Cart 0

Your cart is empty.