பணத்தோட்டம்

70.00

அறிஞர் அண்ணாவின் முக்கியமான அரசியல் பொருளாதாரப் படைப்பு. 1947க்கு முன்பாகவே இந்தியாவில் உருவாகப்போகும் சுதந்திர அரசு ஒரு பனியா ஏகாதிபத்தியமாகவே உருவாகும் என்று அண்ணா கணித்தார்.

SKU: PTM Category:

விவரம்

இந்த நூல் அண்ணாவின் பொருளதாரச் சிந்தனைகளைத் தெள்ளத் தெளிவுற விளக்கும் நூல், -நரேன் ராஜகோபாலன்.
ஒவ்வொரு தமிழரும் படிக்கவேண்டிய மிக முக்கியமான புத்தகம் இது. அறிஞர் அண்ணாவின் எண்ணற்ற படைப்புகளில் ஒப்பற்ற படைப்பு.
இந்தியா சுதந்திரம் அடைந்த தருணத்தில், புது தில்லியில் ஒரு பார்ப்பன அரசு அமைகிறது என்று தந்தைப் பெரியார் சுட்டிக்காட்டினார். அந்த அரசு ஒரு பனியா அரசாகவும் இருக்கிறது என்பதை இந்த நூலில் அண்ணா துல்லியமாகச் சுட்டிக்காட்டுகிறார். மிகச்சிறந்த பொருளாதார நிபுணராகவும் அரசியல் பொருளாதார மேதையாகவும் அண்ணா இருந்திருக்கிறார் என்பதற்கு இந்திய முதலாளித்துவ வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட பரிமாணத்தை அவர் இந்த நூலில் விள்க்கியிருக்கும் விதமே போதுமான சான்றாகும்.
சுதந்திர இந்தியாவில் தென்னாடு மட்டும் எப்படிச் சுதந்திரம் பெறாமலிருக்கிறது என்பதையும் அண்ணா அம்பலப்படுத்துகிறார். அவரைப் போன்ற தலைவர்கள் போராடிப் பெற்ற உரிமைகளை நாம் இன்று இழந்து கொண்டிருக்கிறோம். இந்தத் தருணத்தில், இந்த நூலை மீண்டும் படிக்கவேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறோம்.

Additional information

Author

Publishers

Amazon

விமர்சனங்கள்

இதுவரை விமர்சனங்கள் வரவில்லை

நீங்கள் முதல் விமர்சகராக ஆகுங்கள் “பணத்தோட்டம்”

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Mini Cart 0

Your cart is empty.